ETV Bharat / state

'இலங்கை கடற்படையால் உயிரிழந்த 4 மீனவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும்' - மெசியா, நாகராஜ் , செந்தில்குமார், சாம்சன் டார்வின்

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 4 மீனவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Messiah, Nagaraj, Senthilkumar, Samson Darwin

author img

By

Published : Jan 22, 2021, 10:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் உள்ளிட்டப் பகுதியில் சுமார் 180க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக, கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும், படகுகளை கையகப்படுத்துவதும் என இருநாடுகளின் கடல் எல்லையில் தற்போதுவரை பிரச்னை நிலவி வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி ஆரோக்கியசேசு என்பவருடைய படகில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மெசியா, நாகராஜ் , செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்படையின் தாக்குதலினால் 4 மீனவர்களும் உயிரிழந்ததாக தகவல் வரப்பெற்றுள்ளது.

இதனையடுத்து இலங்கை கடற்படையின் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததுடன் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்குத் தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்தார்.

அதனை மாவட்ட நிர்வாகம் மூலம் நேற்று இரவு(ஜனவரி 21) வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கை அரசின் இச்செயலுக்கு மத்திய அரசும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கடும்கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசுகையில், ' கடல் தொழிலை நம்பி தான், தாங்கள் வாழ்ந்து வருகிறோம். கடல் தொழிலைத் தவிர்த்து வேறு தொழில்கள் தெரியாது.

அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையை வைத்து, தற்போதைய சூழலில் மட்டுமே வாழ முடியும் என்பதால், இனி வரும் காலங்களில் தங்கள் குழந்தைகளின் கல்விக் கனவை நிறைவேற்ற பெரிய அளவில் உதவாது.

இதனால் குழந்தைகளுக்கு முழு கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்.மேலும், இனி வரும் காலங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்’ என்றனர், ஒருமித்த குரலில்.

இதுகுறித்து இறந்த மீனவர் செந்தில்குமாரின் உறவினர் கருப்பையா கூறியதாவது, 'படகு சேதம் அடைந்தது எனத் தெரிந்தவுடன் குடும்பத்துடன் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்றிருந்தோம். அங்கு இந்திய கப்பற்படையினர் நால்வரும் பத்திரமாக இலங்கையிடம் இருப்பதாக கூறினார்.

அதனால், நாங்கள் கரையிலேயே காத்திருந்தோம். ஆனால், மாலை ஆறு முப்பது மணி அளவில் 4 மீனவர்களும் இறந்துவிட்டதாகவும்; 2 மீனவர்களுடைய உடல் யாழ்ப்பாணம் கடற்பகுதியில் ஒதுங்கி இருப்பதாகவும் கூறினார்கள். இவ்வாறு மாற்றி மாற்றி கூறுவது எங்களுக்கு மேலும் அடுத்த முறை கடலுக்குச் செல்வதற்கு அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

மேலும் இலங்கை கடற்படை கம்பி, கட்டைகள் மூலம் கொடூரமாக 4 மீனவர்களை சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் மீண்டும் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டார்.

மீனவர் செந்தில்குமாரின் மனைவி கூறும்பொழுது, ' என் கணவர் அன்றாடம் தொழிலுக்குச் சென்று வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். தற்பொழுது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

எனது மகனை நன்றாகப் படிக்க வைத்து பெரிய ஆளாக பார்க்க வேண்டும் என்று எனது கணவர் விரும்பினார். அவர் தற்பொழுது என்னுடன் இல்லை. அரசாங்கம் அளித்த பணம் பெரிய அளவில் உதவாதே. என்னுடைய மகனின் கல்வி செலவை அரசாங்கமே ஏற்று நல்வழிக்கு வித்திட வேண்டும்' என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுத்து சர்வதேச கடல் எல்லையில் உள்ள பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணும் பட்சத்தில் இதுபோன்ற மதிப்புமிக்க மீனவர்களின் உயிர்கள் காக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த 4 தமிழ்நாடு மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அவ்வாறு செய்திருக்கும்பட்சத்தில் உயிரிழந்த மீனவர்கள் குறித்த உண்மை நிலை மறைக்கப்பட்டுவிடும் என தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: மீனவர்களின் உடல்களை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.