ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள வாலாந்தரவை கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பராமரிக்கப்பட்டுவரும் தோட்டக்கலைப் பண்ணையின் செயல்பாடு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவுடன் இணைந்து ஆய்வுசெய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர், "ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரித்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் பயன்பாடற்ற நிலையிலுள்ள இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு 1000 குறுங்காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குறுங்காடும் சராசரியாக 0.5 முதல் 1.5 ஏக்கர் பரப்பளவுடன் அமைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இதன்மூலம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும் விரிவுபடுத்திடும் நோக்கில் நடப்பாண்டில் 15 லட்சம் மரக்கன்றுகளை நடவுசெய்திட திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா ரூ.8.75 லட்சம் மதிப்பில் ஒரு ஒருங்கிணைந்த மாதிரி தோட்டக்கலை பண்ணை வீதம் மொத்தம் 11 பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்ததாகவும், குப்பை மற்றும் கழிவுப் பொருள்கள் நிறைந்து பயன்பாடற்ற நிலையில் இருந்த இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு இத்தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பண்ணையும் 3 முதல் 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பண்ணைகளில் காய்கறிகள், மூலிகைச் செடிகள், பழக்கன்றுகள், காளான் வளர்ப்பு, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு, கால்நடைகளுக்கான அசோலா தீவன வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒருங்கிணைத்து சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
சோதனை முறையில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரி தோட்டக்கலைப் பண்ணைகளை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
வாலாந்தரவை தோட்டக்கலை பண்ணையை ஆய்வுசெய்த உயர் அலுவலர் - வாலாந்தரவை தோட்டக்கலை பண்ணையை ஆய்வுசெய்த அலுவலர்
ராமநாதபுரம்: வாலாந்தரவையில் அமைந்துள்ள தோட்டக்கலைப் பண்ணையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உள்பட உயர் அலுவலர்கள் ஆய்வுசெய்தார்.
![வாலாந்தரவை தோட்டக்கலை பண்ணையை ஆய்வுசெய்த உயர் அலுவலர் farm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9126210-615-9126210-1602332090115.jpg?imwidth=3840)