ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்தில் நேற்று (நவ.05) காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வளத்துறை அலுவலர்களிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டுபெற்று, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச்சென்றனர். தலைமன்னார் அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ராமேஸ்வரம் பகுதியைச்சேர்ந்த 15 மீனவர்களை நடுக்கடலில் விரட்டிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து அவர்களை விரட்டி நடுக்கடலில் வைத்து, கைது செய்து விசாரணைக்காக தலைமன்னார் கொண்டு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: CCTV: அதிவேகமாக சென்ற அரசுப்பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு!