ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

rameswaram fishermen
author img

By

Published : Nov 22, 2019, 2:44 AM IST

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிப்பதற்காகச் சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ஏழு கப்பல்களில் ரோந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மீனவர்களின் விசைப்படகு மீது கப்பல்களைக் கொண்டு மோதியதில் விசைப்படகுகள் சேதமடைந்தன. மேலும் மீன்பிடி வலைகளை அறுத்தும் மீன்பிடிக்க விடாமலும் தங்களை இலங்கை கடற்கடையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்ற அடுத்த நாளிலேயே இலங்கை கடற்படையினரின் இந்தத் தாக்குதல் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்களும் எந்த பதிப்புமில்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Intro:இராமநாதபுரம்
நவ.21

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் இரு நாட்டு தலைவர் பேச உள்ள நிலையில் தாக்குதல் சம்பவம், நிரந்தர தீர்வு காண மீனவ மக்கள் கோரிக்கை.Body:இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகில்
2000க்கு மேற்பட்ட
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், 7 கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியதில் விசைப்படகு சேதமடைந்துள்ளது. மேலும் மீன்பிடி வலைகளை அறுத்தும் இலங்கை கடற்கடையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற அடுத்த நாளிலேயே இலங்கை கடற்படையினரின் இந்தத் தாக்குதல் மீனவர்கள் மத்தியில் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்களும் எந்த பதிப்புமில்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.