ETV Bharat / state

எல்லை தாண்டி மீன் பிடித்த 11 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sri Lankan court frees 11 fishermen
Sri Lankan court frees 11 fishermen
author img

By

Published : Feb 13, 2020, 8:00 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 29ஆம் தேதி, கடலுக்கு சுவிட்டர் விசைப்படகில் சென்று ரூம்ஸ், ராஜி முத்து, இளையராஜா, செல்வம், விஸ்வா, வசீகரன், நாகரத்தினம், நாகேந்திரன் உள்ளிட்ட 11 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 11 மீனவர்களை அழைத்துச் சென்றனர். 11 மீனவர்கள் மீது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையிலடைத்தனர்.

இதனையடுத்து, இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சம் முன்னிலையில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்கை விச்சாரித்த நீதிபதி, இந்த மீனவர்கள் மீண்டும் எல்லைக்குள் மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 11 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் இவர்களின் விசைப்படகினை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்த 11 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலரிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.