ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 517 விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று (ஜன.9) மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரவு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரின் படகில் சென்ற, வளன் கவுசிக், மிக்கேயாஸ், கினிங்ஸ்டன், சாம் ஸ்டில்லர், கிருபை உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக மற்ற மீனவர்கள் பாதியிலேயே திரும்பி உள்ளனர். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி 22 ராமேஸ்வரம் உள்ளிட்ட 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சம்பவமாக 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: கைதான 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!