இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்மையில், கொழும்பில் அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நாள்தோறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் அங்கு உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் தீவில் (தனுஷ்கோடிக்கு) அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று (மார்ச்.22) வருகை தந்துள்ளனர்.
![ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகும் இலங்கை தமிழர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-refugees-rameswaran-script-7208110_22032022102828_2203f_1647925108_943.jpg)
இலங்கையில் இருந்து அகதிகளாகப் புறப்பட்ட தமிழர்களை ஏற்றி வந்த படகு 4ஆம் மணல் திட்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளது. அவர்களை அங்கிருந்து மீட்க இந்திய கடலோர காவல்படை விரைந்துள்ளது. இந்நிலையில் இலங்கையிலிருந்து வருகைதரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
![இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகும் இலங்கை தமிழர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-refugees-rameswaran-script-7208110_22032022102828_2203f_1647925108_642.jpg)
![தனுஷ்கோடியில் தஞ்சம் புகும் இலங்கை தமிழர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-refugees-rameswaran-script-7208110_22032022102828_2203f_1647925108_244.jpg)