ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் - சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 1,137 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

றப்பு கரோனா தடுப்பூசி முகாம்
றப்பு கரோனா தடுப்பூசி முகாம்
author img

By

Published : Jun 26, 2021, 9:23 PM IST

ராமநாதபுரம் : கரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையின் பாதிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்த போதிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன. பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் , மூத்த குடிமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2,05,464 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், 17,200 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 12,311 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் , 4,500 பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வகத்தின் மூலம் இன்று (ஜூன் 26 ) ராமநாதபுத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் , பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன.

இந்த இரண்டு முகாம்களிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,137 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் . முகாம்களில் கலந்து கொள்ள இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தடவும் திட்டமிடப்பட்டுள்ளது . ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்து பார்வையிட்டார் .

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு இரண்டாவது உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.