ராமேஸ்வரத்தில் வரும் 25ஆம் தேதி ராமநாத சுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 31ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் எளிமையாக சென்று வர தென்னக ரயில்வே சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி, ”மதுரை - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூலை 30 அன்று முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.