ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்டினம் காத்தான் பழைய செக்போஸ்ட் அருகே நேற்று (ஏப்.22) மாலை ராமநாதபுரம் ஏஆர் பிரிவை சேர்ந்த காவலர் தங்கபாண்டியன் மது போதையில், கடம்பா நகரை சேர்ந்த நாகசேகர் என்பவரின் கடையை அடித்து நொறுக்கினார்.
மேலும், போதை அதிகமானதால் சாலையில் சென்ற பொதுமக்களை அநாகரிகமாக பேசியதால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவலர்களையும் அவர் அநாகரிகமாக பேசினார்.
இந்நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பந்தப்பட்ட காவலர் தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோன்று தேனியிலும் காவலர் தங்கபாண்டியன் போதையில் பிரச்னை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமியை காதலித்து ஏமாற்றிய கட்டட தொழிலாளி; பாய்ந்தது போக்சோ!