ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து ராமநாதபுரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி தங்கம், போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடலோர காவல்படையினர், காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகும் அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இலங்கையில் இருந்து சேதுக்கரை தீர்த்தம் அருகே உள்ள களிமண்குண்டு கடற்கரை பகுதிக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்று சுங்கத்துறை அதிகாரிகள் 15 கிலோ தங்கத்தையும் இது தொடர்பாக ஒருவரையும் கைது செய்து இராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பல கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொகுசு காரில் 228 கிலோ கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகி உட்பட 16 பேர் கைது!