ETV Bharat / state

ராமநாதபுரத்தில் மீனவ இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்கான பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது .

Fishermen youths Indian coastguard navy
author img

By

Published : Aug 29, 2019, 11:02 PM IST

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர்வதற்கான பயிற்சி வழங்கும் திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் மீனவ கிராமத்தில் விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் குழந்தைகள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையில் சேர விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மீன்வள துறை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படட்டுவருகின்றன. இங்கு விண்ணப்பித்தவர்களுக்கு ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் பயிற்சிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பயிற்சியின் அடுத்த கட்டமாக சென்னையில் உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்படும்.

ராமநாதபுரத்தில் மீனவ இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்

இப்பயிற்சி முடித்தவர்கள் இந்திய கடற்படை, கடலோர காவல்படையால் நடத்தப்படும் தேர்வில் கலந்துகொள்ள எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு போன்றவற்றிற்கான பயிற்சி இந்திய பாதுகாப்பு அகாடமியால் வழங்கப்படுகிறது.

இதற்கான முதற்கட்ட பயிற்சி ராமநாதபுரத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னையில் பாதுகாப்பு அகாடமி இயக்குநர் சுரேந்திரன், ராமநாதபுரம் வடக்கு,தெற்கு மீன் வளத்துறை துணை இயக்குநர்கள் அப்துல் காதர், ஜெயக்குமார் பங்கேற்றனர்.

Intro:மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்கான பயிற்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது .Body:இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் இரண்டாவது மிக நீளமான கடல் பரப்பையும் கொண்டது இங்கு 184 மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்திய கடல் படை, கடலோரக் காவல் படையில் சேர்வதற்கான பயிற்சி வழங்கும் திட்டத்தை மறைநத
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகம செய்தார்.

அதனடிப்படையில
ஆண்டுதோறும் மீனவ கிராமத்தில் விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மீனவர் இளைஞர்களை இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேர்ப்பதற்கான பயிற்சி தமிழக அரசின் மீன்வளத் துறை சார்பில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள மீனவர்களின் குழந்தைகள் இந்திய கடற்படை இந்திய கடலோர காவல் படையில் சேர வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தமிழக அரசின் மீன்வள துறை அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பம் பெற்று. விண்ணப்பித்தவர்களுக்கு ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் பயிற்சி துவங்கியது.

இந்த பயிற்சி முடிந்தவுடன் அடுத்த கட்டமாக சென்னையில் மூன்று மாத பயிற்சி வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சி முடித்தவர்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆல் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்வதற்காக அவர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை இந்திய பாதுகாப்பு அகாடமி வழங்குகிறது.
அதற்கான முதல்கட்ட பயிற்சி ராமநாதபுரத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில்
சென்னையில் உள்ள பாதுகாப்பு அகாடமி இயக்குனர் சுரேந்திரன், இராமநாதபுரம் வடக்கு,தெற்கு மீன் வளத்துறை துணை இயக்குநர்கள் அப்துல் காதர், ஜெயக்குமார் பங்கேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.