ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த அவரது உறவினர் ஒருவர் பெண்ணைக் காப்பாற்றி, தற்கொலைக்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.
அப்போது அப்பெண், "ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சீதக்காதி, தனசேகர், விஷ்ணு, செழியன், சேதுபாண்டியன் மற்றும் காளிதாஸ் ஆகிய 6 பேர் போகலூர், பரமக்குடி, சத்திரக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் இளம் பெண்கள், கணவனைப் பிரிந்து வாழும் பெண்களைப் பின் தொடர்ந்து, அவர்களை ஆசை வார்த்தைக் கூறி, அவர்களிடம் கூட்டுப்பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அதனை காணொலியாகப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். மேலும் கணவனை விட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கும் பெண்களைக் கண்டறிந்து, அவர்களுடன் பழகி, தனிமையில் உல்லாசமாக இருப்பதையும் காணொலி எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
அதனால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னைப் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து அப்பெண், இவ்விவாகரம் குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்படை அமைத்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆயிரத்து 300 கிராம் கஞ்சா பறிமுதல்: மூன்று இளைஞர்கள் அதிரடி கைது