ETV Bharat / state

விமானத்தில் இருந்து கீழே விழுந்த பின் மாவு கட்டு போடும் பாஜக!

ராமநாதபுரம் : விமானத்தில் இருந்து கீழே குதிப்பவருக்கு பாராசூட் கொடுக்காமல் கீழே விழுந்த பின் மாவு கட்டு போடும் வேலையை பாஜக செய்வதாக ஊரடங்கு குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.

Sivaganga MP Karthik Chidambaram has made the allegation on bjp
விமானத்தில் இருந்து கீழே விழுந்தவருக்கு பின் மாவு கட்டு போடும் பாஜக!
author img

By

Published : May 14, 2020, 1:53 AM IST

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மத்திய அரசு விமானத்தில் இருந்து கீழே விழுவதற்கு பாராசூட் கொடுக்காமல் கீழே விழுந்த பின்பு மாவு கட்டுப்போடும் வேலையைச் செய்து வருவதாகவும். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும், சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்று அவர்களுக்கு தெரியும். தெரிந்தும், அதை மனதில் வைத்து தொழில் நிறுவனங்கள் நிதியாண்டில் கட்டி வந்த ஜி.எஸ்.டி வரியில் 25 சதவீதத்தை கொடுத்து அவர்களை மத்திய அரசு காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை.

இது போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்டு, அதில் நல்ல திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம். அதையும் செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. ஏன் நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்கள் இங்கில்லையா?. அதேபோல, இங்கிருக்கும் மாநில அரசும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரின் கருத்து கேட்க முன்வரவில்லை.

சொந்த மாநிலங்களுக்கு செல்ல இருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அனுப்பி வைப்பதில் பெரிய குழப்பம் நடைபெற்று வருகிறது. இதனால் பலர் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அவர்களின் ரயில் கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில் கூட குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது”என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.