ETV Bharat / state

மண்டபம் கடலில் விடப்பட்ட நான்கு லட்சம் இறால் குஞ்சுகள் - கடலில் விடப்பட்ட இறால் குஞ்சுகள்

ராமநாதபுரம் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நான்கு லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விட்டப்பட்டது.

shrimp-chicks-left-at-sea-in-ramanadhapuram

author img

By

Published : Sep 21, 2021, 8:19 PM IST

ராமநாதபுரம் : மண்டபம் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் ஃபிளவர் இறால் எனப்படும் ஃபினேயஸ் செமிசல்கேட்டஸ் (Penaeus semisulcatus) இறால் வகையின் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இறால் குஞ்சிகளை கடலில் விடும் பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் கடலில் இறால்களின் வளம் பெருகுவதுடன், இது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உறுதுணையாக உள்ளது. கடந்த 2017-2021 ஆண்டுகளில் இதுவரையில் ஒரு கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் (2021-2022) மட்டும் 21 லட்சம் எண்ணிக்கையிலான ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இன்று (செப்.20) மண்டபம் முனைக்காடு பாக் நீரினையில் கடல் புற்கள் உள்ள பகுதியில் நான்கு லட்சம் எண்ணிக்கையிலான ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

கடலில் விடப்பட்ட நான்கு லட்சம் இறால் குஞ்சுகள்

இந்த இறால் விடும் நிகழ்வு மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி முனைவர் ரெ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : நியாய விலைக்கடைகளில் மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.