கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாறு பகுதிகளில், அனுமதியின்றி ஜேசிபி பொக்லைன் உதவியுடன் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக, கமுதி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கமுதி காவல் துறையினர் குண்டாறு, மலட்டாறு, கமுதி கோட்டைமேடு, பசும்பொன் மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மண்டலமாணிக்கம் குண்டாறு பகுதிகளிலிருந்து, அனுமதியின்றி ஆற்று மணலை ஏழு லாரிகளில் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மணல் லாரிகளை கமுதி காவலர்கள் பறிமுதல் செய்து, லாரி டிரைவர்கள் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் ரூ. 4.60 கோடி கடன் பெற முயன்ற தொழிலதிபர் கைது!