ETV Bharat / state

இந்திய மீனவர்கள் ஏழு பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட ஏழு மீனவர்கள்
author img

By

Published : Aug 27, 2019, 10:21 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 12ஆம் தேதி நெடுந்தீவு அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிசிங்கர் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படை வழக்குப்பதிவு செய்து மீனவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் வழக்கு விசாரணை இன்று இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் வரும் காலங்களில் இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என எச்சரித்து மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், விசை படகுக்கான உரிய ஆவணங்களுடன் வரும் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி படகின் உரிமையாளர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் படகு இலங்கை அரசுடமையாக்கப்படும் என தீர்ப்பளித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அடுத்த வாரம் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:இராமநாதபுரம்
ஆக.27

ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Body:இராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 12ஆம் தேதி நெடுந்தீவு அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த கிசிங்கர் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர் கிசிங்கர்,மரியமில்லர்,நெல்சன்,இன்னாசி, மரிய கிதியோன், சிம்சோன், ஜார்ஜ், ஆகிய ஏழு மீனவர்களையும் படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை வழக்கு பதிவு செய்து மீனவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மீனவர்களின் வழக்கு விசாரணை இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்திற்கு வந்தது வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் வரும்காலங்களில் கடல் இலங்கை எல்லைக்குள் வரக் கூடாது என எச்சரித்து மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் விசைபடகுக்கான உரிய ஆவணங்களுடன் வரும் அக்டோபர் மாதம் 29ந் தேதி படகின் உரிமையாளர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் தவறும் பட்சத்தில் படகு இலங்கை அரசுடமையாக்கப்படும் என தீர்ப்பளித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அடுத்த வாரம் விமானம் மூலம் தாயகம் திருப்பி எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.