ETV Bharat / state

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை: ராமநாதபுரத்தில் பரபரப்பு - Security concerns amid Vinayakar chathurthi celebration

ராமநாதபுரம்: இந்து முன்னணி அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலையை வெளியே எடுத்து செல்ல விடாமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

ganesh idol
ganesh idol
author img

By

Published : Aug 20, 2020, 10:19 PM IST

நாடு முழுவதும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது, பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கிடையே, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான தளர்வுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இதனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ கூடாது என தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உயர்நீதிமன்றமும் அரசு உத்தரவை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தடையை மீறி ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

அதில், விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்து பூஜை செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ராமேசஸ்வரம் கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் தற்போது இந்து முன்னனி அலுவலக வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் சிலை வைப்பதற்கான தடை இருப்பதால், இந்து முன்னணி நிர்வாகிகள் சிலையை எடுத்துச் செல்வதை தடுக்க உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்து மக்கள் கட்சி நிர்வாகி வீட்டில் 52 விநாயகர் சிலைகள்: எச்சரித்த காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.