ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை கடல் பகுதியில் கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று கடல் பசுவை ஆய்வு செய்தனர்.
பிறகு மருத்துவர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் கடல் பசுவிற்கு உடற்கூறு ஆய்வு செய்து அதனை கரையோரம் அடக்கம் செய்தனர்.
இது குறித்து கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்சாவிடம் கேட்டபோது ”இறந்து கரை ஒதுங்கியது இரண்டரை வயது மதிக்கத்தக்க பெண் கடல் பசு. இதன் நீளம் 226 செ.மீட்டர் இருந்தது. 165 செ.மீட்டர் அகலம், 330 செ.மீட்டர் சுற்றளவு உடையது. இந்த கடல் பசு பாறை அல்லது படகில் மோதி மயக்கமடைந்து இறந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடல் அட்டைகளைக் கடத்திய 4 பேர் கைது!