இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வழியாக அரிச்சல்முனை வரை அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று( ஏப்ரல் 7 ) காலை அரிச்சல் முனையில் இருந்து அரசு பேருந்தை நடத்துனர் உதயா இயக்கியுள்ளார். அப்போது, பேருந்து தனுஷ்கோடி நோக்கி வந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை சாலையில் இருந்து விலகி தடுப்புகளை உடைத்து கடலுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டது.
இதனால், தனுஷ்கோடி சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி விட்டனர். தொடர்ந்து பேருந்தை நடத்துனர் உதயா இயக்கியுள்ளார். அப்போது, எம்ஆர் சத்திரம் அருகே ஆமை பொரிப்பகத்தின் அருகே பேருந்து விபத்துக்குள்ளாகியது. அதில், பயணம் செய்த மகாதேவி என்பவர் தலையில் காயம் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, அவர் முதல் உதவிக்காக இராமேஸ்வரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தனுஷ்கோடி செல்லும் பேருந்தை நடத்துனர் இயக்குவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: அரியர் தேர்வு ரத்து உத்தரவை ஏற்க இயலாது- சென்னை உயர் நீதிமன்றம்