ETV Bharat / state

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்! - ராமநாதபுரத்தில் ரசாயனம் மூலம் பழுக்கவைத்த மாம்பழங்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: கமுதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 3 ஆயிரம் கிலோ மாம்பழத்தை உணவு கட்டுப்பாட்டுத் துறையினர் அழித்தனர்.

ரசாயனம் மூலம் பழுக்கவைத்த மாம்பழங்கள் பறிமுதல்

author img

By

Published : May 6, 2020, 10:22 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுந்தரபுரத்தில் உள்ள குடோனில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பதாக உணவு கட்டுப்பாட்டுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள் அந்தக் குடோனை ஆய்வு செய்தனர். அங்கு ரசாயனம் மூலம் (எத்திப்பான் ஸ்பிரே) 3 ஆயிரம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர், அங்கிருந்த மாம்பழங்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் குப்பை கிடங்கில் கொட்டினர். ஊரடங்கு தளர்த்திய ஒரே நாளில் மாங்காய்களை வரவழைத்து, அதில் ரசாயனம் தெளித்து பழுக்க வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: ஊரடங்கால் நுங்கு, கிர்ணி பழ விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.