ETV Bharat / state

மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி, போராடிய வருவாய் அலுவலர்கள் - மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி

ராமநாதபுரம்: மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Revenue Officers Struggle To Replace Revenue Officer

author img

By

Published : Jan 8, 2020, 10:17 PM IST

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்தவர் முத்துமாரி. இவரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும், காழ்ப்புணர்ச்சியின் பேரில் சிலர் மீது புகார் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், வருவாய் அலுவலர்கள் முத்துமாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி விடுப்பில் சென்றார். இந்நிலையில் இன்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். இதை அறிந்த வருவாய் அலுவலர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் சேர்ந்த 544 வருவாய் அலுவலர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில், பங்கேற்று உள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

வருவாய் அலுவலரை மாற்றக்கோரி வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த வருவாய் அலுவலரை வேறு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் எனவும், மாவட்ட வருவாய் அலுவலர் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: கணவர் கண்முன்னே பெண் உயிரிழப்பு

Intro:இராமநாதபுரம்
ஐன.8

மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
வருவாய் அலுவலர்கள்
காத்திருப்பு போராட்டம்.

Body:இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த முத்துமாரி இவரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும். காழ்ப்புணர்ச்சியின் பேரில் சிலர் மீது புகார் தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி விடுப்பில் சென்றார். இந்நிலையில் இன்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வைத்தார். இதை அறிந்த வருவாய் அலுவலர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் சேர்ந்த 544 வருவாய் அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கி நடத்திவருகின்றனர்

இவர்கள் இரண்டு கோரிக்கையை முன்வைக்கின்றனர் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த வருவாய் அலுவலரை வேறு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்ய வேண்டும். மேலும் இவர் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : பழனிகுமார். மாவட்ட தலைவர்
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.