ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மே ஏழாம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறந்த தகவல் அவரின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட உறவினர்கள், உரிய சிகிச்சை வழங்காததால்தான் அவர் இறந்துள்ளார் என கூறி போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உறவினர்களை சமாதானப்படுத்தினர். பின் அவர்கள் உடலை பெற்றுச் சென்றனர். தற்போது வரை ராமநாதபுரத்தில் 1328 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: லேன்செட் அறிக்கை சுட்டி பிரதமர் மோடியை விமர்சிக்கும் எம்.பி.