தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்து அம்மாவட்டங்களில் பொதுச் சுகாதார, ஊட்டச்சத்து மேம்பாடு வேளாண்மை, நீர்ப்பாசனம், வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட குழந்தைகள் நலன் மேம்படும் போது மாவட்டம் தானாக மேம்படும்.
அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள 727 மாவட்டங்களில் 51 மாவட்டங்களில் குழந்தைகள் தொடர்பான சிறப்பு அமர்வு நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் முதல் அமர்வு ராமநாதபுரம் மாவட்ட கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையர் பிராங்க் கனூங்கு, மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத் தலைவர் நிர்மலா, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.