ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டினர். இம்மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 910 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்து 725 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் கிராம பஞ்சாயத் தலைவர் பதவிக்காக 1,479 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 2,713 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 479 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 41 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இறுதி நாளான நேற்று மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் சுயேட்சைகளும் ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மேலும் நேற்று மட்டும் ராமநாதபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5173 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க:
40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்