இந்தோனேசியாவைச் சேர்ந்த எட்டு பேர் டெல்லி வழியாக மதுரை, சிக்கல், ராமநாதபுரம், ஏர்வாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத பரப்புரை செய்வதற்காக வந்துள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக காவல் துறையினர் அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைகளின் முடிவில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்து, இந்திய அரசு அமல்படுத்தியுள்ள 144 தடை உத்தரவை மீறி மத பரப்புரையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்கள் மீது ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:நாகையில் மத பரப்புரை செய்யவந்த வெளிநாட்டினர் கண்காணிப்பு