ETV Bharat / state

காலவரையற்ற வேலைநிறுத்தம், அரசு அலுவலகம் முற்றுகை: ராமேஸ்வரம் அப்டேட் - மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் சிறைhdபிடிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்து அறிவிக்குமாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மேலும், இலங்கை கடற்படையினருக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

rameswaran fishermen strike
rameswaran fishermen strike
author img

By

Published : Dec 16, 2020, 2:23 PM IST

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான்கு விசைப் படகுகளையும் அதிலிருந்த 29 மீனவர்களையும் நேற்று முன்தினம் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நேரடியாக 5000-க்கும் மேற்பட்ட மீனவர்களும் சார்பு தொழிலாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனக்கூறி மீனவர்களது உறவினர்கள் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அப்போது, சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். இல்லையெனில் நான்கு படகிற்கும் தலா 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். மேலும், கடலுக்குச் சென்ற தன் மகனை மீட்டுத் தர வேண்டும் எனத் தாய் ஒருவர் கண்ணீருடன் மீன்வளத் துறை அலுவலகத்தில் அமர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கடல் முழுவதும் இலங்கை கடற்படை: அச்சத்தில் இரவோடு இரவாக கரை திரும்பிய மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.