ETV Bharat / state

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை: ராமேஸ்வரம் மீன்வளத் துறை அறிவிப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ராமநாதபுரம்: காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீன்வளத் துறை தடைவிதித்துள்ளது.

Rameswaram Fisheries Department announces ban on fishermen from going to sea due to wind speed

author img

By

Published : Feb 3, 2021, 6:39 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இன்று (பிப். 3) அதிவேகமாக காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென ராமேஸ்வரம் மீன்வளத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "காற்றின் வேகம் கடல் பகுதியில் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் இன்று (பிப். 3) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாது. மீறிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ராமேஸ்வரம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை: சசிகலா வருகை காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.