ரூ.1.35 கோடி மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல் - கடலோர காவல் படை அதிரடி! - மண்டபம் கடல் வெள்ளரி கடத்தல்
அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டை கடத்தலைத் தடுத்த கடலோர காவல் படை அதிகாரிகள் ரூ.1.35 கோடி மதிப்பிலான கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை கடல் அட்டை கடத்தல் நடப்பதாக கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. ரோந்து பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர காவல் படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது. ஆத்தங்கரை கடற்பகுதியில் கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் அளவில் இருக்கும் என கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆழ்கடலில் காணப்படும் கடல் அட்டைகள், கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1912-ன் கீழ் கடல் அட்டைகள் அரிய வகை உயிரினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் கடத்தலைத் தடுத்த கடலோர காவல் படை அதிகாரிகள், தலைமறைவான கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு: கோவா சென்று திரும்புகையில் நடந்த கார் விபத்தில் 4 தமிழர்கள் பலி!