ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர் உடல் தஞ்சை கடல் பகுதியில் மீட்பு - rameshwaram Missing fisherman body found

ராமநாதபுரம்: கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர் உடல் தஞ்சை கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

Ramanadhapuram Fisherman missing
Ramanadhapuram Fisherman missing
author img

By

Published : Jun 20, 2020, 9:22 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மீனவர்கள் நான்கு பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நான்கு மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகினர். இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கொள்ளுக்காடு பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடலில் ஒரு உடல் மிதந்து வருவதையறிந்த மீனவர்கள் அந்த உடலை மீட்டு கொள்ளுக்காடு கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.

உடனே இதுகுறித்து கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து பார்க்கையில், அவர் ராமேஸ்வரம் மீனவர் ரெஜின்பாஸ்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதே இடத்திலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டு மீனவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.