ETV Bharat / state

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையால் 20 மீனவர்கள் கைது - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் 20 மீனவர்கள் கைது

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இரண்டு படகுகளையும் எடுத்துச் சென்றுள்ளது.

Rameshwaram 20 Fisherman arrested, ராமநாதபுரம், Ramanthapuram, இலங்கை கடற்படை, Srilankan navy, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் 20 மீனவர்கள் கைது, Rameshewaram 20 fishermen arrested by Sri Lankan navy
Rameshewaram 20 fishermen arrested by Sri Lankan navy
author img

By

Published : Mar 25, 2021, 2:42 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று (மார்ச் 24) 394 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடி அனுமதிச்சீட்டு பெற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தங்கச்சிமடம் மரியசிங்கம் என்பவரின் படகில் சென்ற மரிய சிங்கம், ராபின்சன், பேசியர், பிராங்க்ளின், சுபி, சோனைமுத்து, சக்தி, விஜயன் உள்ளிட்ட 9 பேரையும், தங்கச்சிமடம் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் படகில் சென்ற ரோசஸ், டெரன்ஸ், கதிர், ஜான், மகேஸ்வரன், சிவா, புளூடாஸ் உள்ளிட்ட 11 பேர் என மொத்தமாக 20 மீனவர்களைக் கைது செய்து இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாம்பன் பாலத்தை வரிசையாகக் கடந்துசென்ற 3 கப்பல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.