கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி முடிவடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானதையொட்டி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்கள் மூலம் முடிவை அறிந்து கொண்டனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 92.30% சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மாநிலத்தின் தேர்ச்சி விகிதத்தில் 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 15,474 மாணவ, மாணவிகள் தேர்வெழுதியிருந்த நிலையில் 14,282 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுர மாவட்டம் கடந்த ஆண்டு 4-ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. இந்த வருடம் தேர்ச்சி விகிதம் சரிந்து 16ஆம் இடத்திற்கு வந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.