ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தூரி, எட்டிசேரி, கீழ காஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்தப் பகுதிகளில், கடந்தாண்டு இறுதியில் வழக்கத்துக்கு மாறாக பருவ மழை பெய்து கண்மாய், குளம், ஊரணி, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து காணப்பட்டன.
கடந்த சில மாதங்களுக்கு மேலாக, நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் கால்நடைகளுக்கு நீர் கொடுப்பதில் சிக்கல் எற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று( ஜூலை 20) முதுகுளத்தூர் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்ததால் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாரல் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி - முதுகுளத்தூரில் சாரல் மழை
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
![சாரல் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி சாரல் மழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:12:22:1595248942-tn-rmd-04-rain-fall-around-muthukulathur-visual-script-7204441-20072020171942-2007f-1595245782-307.jpg?imwidth=3840)