ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் அக்னித் தீர்த்தக் கடலில் புனித நீராடி, ராமநாத சுவாமியையும் பர்வத்தவர்த்தினி அம்மாளையும் வழிபடுகின்றனர்.
அப்படி வருகைதரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். உண்டியல்கள் இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு திறந்து எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களும், திருக்கோயில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் வருவாயாக 65 லட்சத்து 44 ஆயிரத்து 87 ரூபாய், தங்கம் 110 கிராம், வெள்ளி 225 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதையும் படிங்க: தன்னைத்தானே மணந்துகொண்ட மாடல் அழகி!