ETV Bharat / state

ராமநாதபுரம் சிறையில் கைதி உயிரிழப்பு - ramanathapuram prison dies

ராமநாதபுரம் சிறைச்சாலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த குமரப்பா(72) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

ramanathapuram-prison-dies
ramanathapuram-prison-dies
author img

By

Published : Jul 17, 2020, 7:08 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திருநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரப்பா(72). அவரும், மூன்று பேரும் இலங்கைக்கு 192 கிலோ கஞ்சா கடத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது போதைப் பொருள் தடுப்பு குற்றப்பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறைச்சாலையில் கடந்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அடைக்கப்பட்டர்.

இந்த நிலையில் அவர் கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். அதையடுத்து இன்று (ஜூலை17) காலை உடல்நிலைக் கவலைக்கிடமாகவே சிறையிலிருந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உயிரிழந்தாக தெரிவித்தார். மேலும் உடல்கூறு ஆய்வுக்காக உடல் மருத்துவமனையில் வைக்கப்படுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் லாக்அப் மரணங்கள் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.