ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையத்திற்காக கடலில் எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பாலம் கட்டுவதற்கான பணியை எல்என்டி நிர்வாகம் செய்துவருகிறது.
இந்நிலையில் களிமண், சவுடு மண் போன்றவற்றை பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டுகிறது. சவுடு மணலால் கடலில் வாழும் அரிய வகை உயிரினங்களான டால்பின், கடல் ஆமை, கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பாசிகள் ஆகியவை உயிரிழப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை 13 மாவட்டங்களில் சவுடு மண் அல்ல தடை விதித்துள்ளது. அந்த உத்தரவையும் எல்என்டி நிர்வாகம் மீறி செயல்படுகிறது. இது குறித்து வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் இன்று உப்பூர் கிராம மக்கள் சவடு மண் பயன்படுத்தி பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: காவிரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம் !