தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு சமுதாய அமைப்புகள் தொகுதி பங்கீடு குறித்து, தங்களது கூட்டணி கட்சிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாரதி நகர் பகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் அகமுடையார் சமுதாயம் பெரும்பான்மை இருக்கக்கூடிய ராமநாதபுரம் அல்லது திருவாடானை தொகுதிகளை தங்களது கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் கேட்டு வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி 234 வேட்பாளர்கள் அறிமுகம்