ராமநாதபுரம் மாவட்டத்தின் 24ஆவது ஆட்சியராகத் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் ஜெ.யு. சந்திரகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சந்திரகலா, “கரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.
நான் மகளிர் மேம்பாட்டு பதவிகளில் இருந்ததனால் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மகளிர் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என ஆராயப்படும். மேலும், மகளிருக்குத் தொழில் முனைவோருக்கான பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தின் 63ஆவது ஆட்சியர் பொறுப்பேற்பு!