ராமநாதபுரத்ம் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவு நீர் ஓடும் நிலைமை நிலவுகிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 12ஆவது வார்டு வசந்தநகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக கழிவுநர் பாதை செயல்படாததால் மோட்டர் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் அந்தப் பகுதிகளில் வாகனம் செல்லாதபடி நகராட்சி துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனைக்கண்டித்து இன்று (பிப்.16) அப்பகுதியில் 20 மேற்பட்ட பெண்கள் உள்பட பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி முறையாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் கொண்டு வந்த காரணத்தால் அதனை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் கழிவு நீர் அடைப்பைச் சரிசெய்த நகராட்சி ஆணையர்!