ETV Bharat / state

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மாரடைப்பால் உயிரிழப்பு! - fisherman died while went sea for fishing

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

amhes
amehsramhws
author img

By

Published : Sep 27, 2020, 6:36 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

அந்த வகையில், ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 6 பேர் காலை 8 மணியளவில் மீன் பிடிக்க சென்றுவிட்டு கரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, படகில் இருந்த இருதயராஜ் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விரைவாக கரைக்கு வந்தடைந்த மீனவர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.