ராமநாதபும் மாவடத்தில், ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 72 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2.20 கோடி மதிப்பிலான பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.46 லட்சத்து 36 ஆயிரத்து 197, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.44 லட்சத்து 70 ஆயிரத்து 650, அதிகபட்சமாக ராமநாதபுரம் சசட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.93 லட்சத்து 34 ஆயிரத்து 490, முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.35 லட்சத்து 67 ஆயிரத்து 275 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.