ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இவர், கரோனா சிகிச்சைக்கான நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று(மே.10) அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதும், தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.
பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்சியருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவரது பாதுகாவலர், வாகன ஓட்டுநர் என, அவருடன் பணி சார்ந்து நெருக்கமாக இருந்தவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையையும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5 நிமிட தாமதத்தால் பறிபோன 11 உயிர்கள்: திருப்பதியில் சோகம்!