ETV Bharat / state

ராமநாதபுரம்: விடைத்தாள்கள் திருத்தும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்!

author img

By

Published : May 26, 2020, 10:24 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

விடைத்தாள்கள் திருத்தும் மையத்தை ஆட்சியர் செய்யும் காட்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி என மொத்தமாக பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையம் 4️ அமைந்துள்ளன. இதனை இன்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறியதாவது, ”பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ராமநாதபுரத்தில் இரண்டு விடைத்தாள் திருத்தும் மையம் மற்றும் பரமக்குடி என நான்கு மையத்தில் ஜூன் மாதம் 9ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கின்றனர்.

பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் 928 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மொத்தமாக 99 ஆயிரத்து 578 விடைத்தாள்கள் ராமநாதபுரத்தில் திருத்தப்பட உள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக விடைத்தாள் திருத்தும் அறைகளின் 8 பேர் மட்டுமே தகுந்த இடைவெளியுடன் திருத்தும் பணியை மேற்கொள்வார்கள் எனவும், தினசரி இருமுறை விடைத்தாள் திருத்தும் மையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்” என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: விடைத்தாள் திருத்தும் மையங்களில் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.