ETV Bharat / state

அனல் பறந்த தேர்தல் பரப்புரை ஓய்ந்தது...! நாளை மறுநாள் வாக்குப்பதிவு

ராமநாதபுரம்: இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்ததால் பாஜக, இமுலீக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பரப்புரை மாலை 6 மணி வரை அனல் பறந்தது.

தேர்தல் பரப்புரை
author img

By

Published : Apr 16, 2019, 8:15 PM IST

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, இன்று மாலை ஆறு மணியுடன் இறுதி பரப்புரை நிறைவடைந்தது. முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், இந்திய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அமமுக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் தீவிர தேர்தல் பரப்புரையை காலையிலிருந்தே தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு செய்தனர்.

இந்நிலையில், இவர்களின் தேர்தல் பரப்புரைக் காரணமாக ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், தேர்தல் களம் இறுதி நாளில் அனல் பறந்தது என்றே கூறலாம்.

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். அதேபோல் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் அமமுக வேட்பாளர் ஆனந்த் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Intro:இராமநாதபுரம்
ஏப்ரல்.16
ராமநாதபுரம் நகரின் வெப்பநிலை அதிகரித்து வேட்பாளர்களின் இறுதி நாள் தேர்தல் பிரச்சாரம்.

Body:மக்களவை தேர்தலில் இறுதி பிரச்சாரம் இன்று 6 மணியுடன் நிறைவு அடைவதை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் நகர் பகுதியில் அதிமுக கூட்டணி பாஜக சார்பாக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணி இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை காலையிலிருந்தே துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவு செய்தனர். இவர்களின் தேர்தல் பிரச்சாரம் காரணமாக ராமநாதபுரம் நகர் பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும் தேர்தல் களம் இறுதி நாளில் அனல் பறந்தது என்றே கூறலாம்.

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் மணிகண்டன் மற்றும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் கட்சியினர் ஆளும் கட்சி குற்றம்சாட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அமமுக வேட்பாளர் ஆனந்த் இவர்கள் இருவருக்கும் மாற்றாக வெற்றி பெறுவேன் என்றும் டெபாசிட் இருவரையும் இழக்கச் செய்வேன் என்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.