ராமநாதபுரம்: கேணிக்கரைப் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று (ஜூலை 26) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பேக்கரியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேக்கரி செயல்படாமல் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்ததனால், அங்கு ஆட்கள் யாரும் இல்லை. இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.