ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுடன் இணைந்து காவல்துறை சார்பில் 'கலவர ஒத்திகை' நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், இன்று (பிப்.6) கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவலர்கள், பொதுமக்களை வைத்து 'கலவர ஒத்திகை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காவலர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து, கலவரக்காரர்கள் போல் கையில் அரிவாள், உருட்டு கட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை ஏந்தியபடி ஒரு புறமும், மற்றொரு புறம் சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காகவும் நிறுத்தப்பட்டனர்.
அப்போது கலவரக்காரர்கள் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கி கொள்வது போலவும், கத்தியால் குத்துவது போலவும் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். அதன்பிறகு சீருடை அணிந்த காவலர்கள் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது போலவும், ஆனால் கலவரக்காரர்களாக இருக்கும் காவலர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கலவரத்தை அடக்குவதுபோல் காவலர்கள் ஒத்திகை நடத்தினர். இந்நிகழ்ச்சி குறித்த உண்மை நிலை அறியாத பொதுமக்கள் இதைக்கண்டு சிறிது பீதியடைந்தனர்.
இதையும் படிங்க: டிராக்டர் பேரணி - காவல்துறையினர் தடுப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை!