ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: அதிமுக ஒன்றியச் செயலாளரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி!

author img

By

Published : Dec 20, 2019, 4:52 AM IST

ராமநாதபுரம்: தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

local body
உள்ளாட்சி தேர்தல்

ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக்கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே வார்டில் ராமநாதபுரம் நேரு நகரைச் சேர்ந்த முருகன் முரளிபாபு என்பவரும் போட்டியிடுகிறார். இதனால் இரு தரப்பினருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டு பகையாக மாறியுள்ளது.

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு சக்கரக்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் அசோக்குமார் வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது முருகன் முரளிபாபு சில ஆட்களுடன் சேர்ந்து அசோக்குமாரை வழிமறித்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அசோக்குமார் கேணிக்கரை காவல்துறையிடம் புகார் அளித்ததின் பேரில், முருகன் முரளிபாபு, மாந்தோப்பு கண்ணன் (23), எம்.எஸ்.கே.நகர் கார்த்தி (23), வீரபத்திரசாமி தெரு தயாநிதி (22), எம்.எஸ்.கே.நகர் அருண்குமார் (24), ஓம்சக்தி நகர் உலகநாதன் (23), ஆகியோரை காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்தனர். அவர்களில் முருகன் முரளிபாபு தவிர மற்ற 5 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞர் உயிரிழப்பு!

Intro:இராமநாதபுரம்
டிச.19
இராமநாதபுரத்தில் தேர்தல் முன் விரோதம் காரணமாக அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளரை
கொல்ல முயன்ற கூலிப்படையினர் காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்து 5
பேரை கைது செய்தனர்.Body:இராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் 47. இவர் அ.தி.மு.க. இராமநாதபுரம் ஒன்றியச் செயலராக உள்ளார். இவருக்கும்
முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி மற்றும் குடும்ப பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக்கோட்டை 9 வது வார்டில் இராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதே வார்டில் ராமநாதபுரம் நேரு நகரைச் சேர்ந்த முருகன் முரளிபாபு என்பவரும் போட்டியிடுகிறார். இதனால் இரு தரப்பினருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டு
விரோதமானது.
இந்தநிலையில், அசோக்குமார் டிச.16 மாலை சக்கரக்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் ஓட்டு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது முருகன்முரளிபாபு
உள்ளிட்டோர் அசோக்குமாரை வழிமறித்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இது குறித்து அசோக்குமார் கேணிக்கரை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து முருகன்முரளி பாபு, மாந்தோப்பு கண்ணன் 23, எம்.எஸ்.கே.நகர் கார்த்தி 23, வீரபத்திரசாமி
தெரு தயாநிதி 22, எம்.எஸ்.கே.நகர் அருண்குமார் 24, ஓம்சக்தி நகர் உலகநாதன் 23, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் முருகன்முரளி பாபு தவிர மற்ற 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கேணிக்கரை போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.