ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட இரண்டு பெண்கள், காவல் துறை குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் உள்பட நான்கு ஆண்கள், கீழக்கரையில் மூன்று பெண்கள், ஆறு ஆண்கள், கமுதி, அபிராமம் பகுதிகளில் தலா இரண்டு பெண்கள், ஆண்கள், வளநாடுவில் இரண்டு ஆண்கள், வட்டாணம், ஆர்.எஸ். மங்கலம், ராதானூர், போகலூர், முதுகுளத்தூர் என பல்வேறு இடங்களில் 13 பெண்கள், 25 ஆண்கள் என 38 பேருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதுகுளத்தூரில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 84 வயது முதியவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவரை ராமநாதபுரத்தில் கரோனா காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குற்றம் - 01: 'ஜூஸ் ஜேக்கிங்' மூலம் ஹேக் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்