இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, செயற்கை அவயவங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.15) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செயற்கை கால்கள், மூன்று சக்கர வண்டி போன்றவை வழங்கப்பட்டன. இந்நிலையில், மாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக காலை 9 மணிக்கே ராமநாதபுரம் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வரவழைக்கப்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர வைத்திருந்தனர்.
இதனால், உடலளவில் நொந்து போய் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் பல மணி நேர காத்திருப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
திருவள்ளூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்!