ETV Bharat / state

சுற்றுலா பட்ஜெட் மகிழ்ச்சி... ஆனால் அடிப்படை வசதி அவசியம் - ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கு 9.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்துக்கு ஒதுக்கியுள்ள ரூ. 9.80 கோடி சுற்றுலா நிதி பட்ஜெட்டில், அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

rameshwaram
rameshwaram
author img

By

Published : Feb 17, 2020, 7:33 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோன்று தனுஷ்கோடி, அரிச்சல்முனை, விவேகானந்தர் மண்டபம் பகுதிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிப்.14ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது ராமேஸ்வரம் சுற்றுலாவை மேம்படுத்த ரூ. 9.80 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மக்கள் கூறுகையில், ராமேஸ்வரம் சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ. 9.80 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சி தரும் அறிவிப்பு. அதேபோன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை சீர் செய்யவேண்டும். கோயிலை சுற்றியுள்ள சாலையை மேம்படுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், தங்கும் விடுதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

ராமேஸ்வரம் மக்கள் கருத்து

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.